PPR குடியிருப்பின் சமூக நலத்திட்டங்களை மேம்படுத்த 31/2 கோடி ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கீடு -பிரதமர்

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள PPR வீட்டுத் திட்டங்களில் சமூக நல திட்டத்திற்கு 3 1/2 கோடி ரிங்கிட் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த ஒதுக்கீடானது “நமக்காக நாம்” என்ற K2K திட்டத்தின் மூலம் 50,000 PPR குடியிருப்பாளர்கள் பயனடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது, இதில் பிரச்சனைகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சுமார் 12 வீட்டுத் திட்டங்கள் அடங்கும் என்று நிதி அமைச்சருமான அவர், இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 8) திட்டத்தை தொடங்கிவைத்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் உள்ளாட்சி மேம்பாட்டு துணை அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த K2K திட்டம், பொது குடியிருப்புப் பகுதிகளில் கட்டிட மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலைப் பற்றிய விஷயங்களை மேம்படுத்துவது மற்றும் சமூகத்தின் பங்கை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here