ஜோகூரில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 250 குடும்பங்களுக்கு, அவர்களின் சுமையைக் குறைக்க புதிய எரிவாயு அடுப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஆயிர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் வழங்கினார்.
இதுபோன்ற உதவியை 1,484 குடும்பங்கள் இதற்கு முன்பு பெற்றதாகவும், இதில் மெத்தைகள் மற்றும் போர்வைகள், சமையலறை பாத்திரங்கள், உலர்ந்த உணவு பொருட்கள் மற்றும் எரிவாயு அடுப்புகள் என்பன அடங்கும்” என்று MCA தலைவர் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 8) வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.
செமராங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சம்சோல்பாரி ஜமாலி, யோங் பெங் சட்டமன்ற உறுப்பினர் லிங் தியான் சூன் மற்றும் அவர்களது குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுபோன்ற பொருட்களைப் பெறுவதில் கடுமையாக உழைத்ததற்காக நன்றி தெரிவித்த டாக்டர் வீ, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல்வேறு வழிகளில் பங்களித்த எங்கள் தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள்” என்று அப்பதிவில் மேலும் கூறினார்.









