அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அரசு ஊழியர், அவரின் மைத்துனி ஆகியோருக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கூட்டரசுத் துறைக்கான மொத்தம் RM30,000 மதிப்புள்ள கொள்முதலில் அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டின் விசாரணைக்காக, ஒரு அரசு ஊழியர் மற்றும் அவரது மைத்துனி ஆகியோர் இன்று (ஏப்ரல் 11) முதல் ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

44 வயதான தலைமை நிர்வாக உதவியாளர் மற்றும் 39 வயதான நிறுவன உரிமையாளராக பணிபுரிந்த இரு பெண்களுக்கும் எதிரான விளக்கமறியல் உத்தரவை, மாவட்ட நீதிமன்ற நீதிபதி நிக் தர்மிஜி நிக் முகமட் சுக்ரி வெளியிட்டார்.

குறித்த இரு பெண்களும் நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 10) திரெங்கானுவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here