18,000 யாபா மாத்திரைகளுடன் இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

ஜாலான் ரந்தாவ் பாஞ்ஜாங் சாலையில், பாசீர் மாஸில் நேற்று போலீசார் நடத்திய சோதனையில், போதைப்பொருள் வியாபாரிகள் என நம்பப்படும் வேலையில்லாத இருவர், 180,000 ரிங்கிட் மதிப்புள்ள 18,000 யாபா மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

போலீசாருக்கு விடைத்த தகவலில் அடிப்படையில், அதிகாலை 4.15 மணியளவில் நடந்த இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரையும் சோதனையிட்டதாகவும் அதில் யாபா மாத்திரைகள் கொண்ட பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மாநில காவல்துறை தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.

“கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் தாய்லாந்து குடிமகன் என்பதையும், அவரிடம் நாட்டிற்குள் நுழைவதற்கான சரியான பயண ஆவணம் எதுவும் இல்லை என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம் என்றார்.

“சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில், அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும், மெத்தம்பேட்டமைனுக்கு சாதகமாக இருந்ததும் கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று கிளாந்தான் காவல் படைத் தலைமையகத்தில் (IPK) செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here