நோன்புப்பெருநாள் காலத்தில் மாராங்கின் 8 பகுதிகளில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படும்

மாராங் மாவட்டத்தில் உள்ள மொத்தம் எட்டு பகுதிகள், நோன்புப்பெருநாள் காலத்தில் குறைந்த நீர் அழுத்த பிரச்சனைகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று, சரிக்காட் ஆயிர் திரெங்கானு நிறுவனத்தின் (Satu) தலைமை நிர்வாக அதிகாரி அப்துல் கரீம் என்டுட் தெரிவித்தார்.

பாதிக்கப்படும் பகுதிகளாக கம்போங் துரியான் காசிம், புக்கிட் கேச்சில், துரியான் பாஹிட், கோங் பாலாய், பாசீர் புத்தே, அலோர் கெட்டிதிர், ஃபகிர் மற்றும் ஃபெல்டா ரந்தாவ் அபாங் l எல் ஆகிய பகுதிகள் இந்தப் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று அவர் கூறினார்.

எனவே நீர் விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகளில் 34 நிலையான தொட்டிகளை வைத்து அனைத்து பயனாளிகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைப்பதை சரிக்காட் ஆயிர் திரெங்கானு உறுதி செய்யும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here