நாட்டின் வட மாநிலங்களை கொளுத்தும் வெப்ப அலை

கடுமையான வெப்பம் மற்றும் மிதமான காற்று என்பன பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் சூடாக்கியுள்ளது. ஆங்காங்கே மழை பெய்தாலும், மிகவும் சூடான வெயில் வெளுத்துவாங்குகிறது.

சமீபத்தில் தாய்லாந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக வெப்பநிலையை எதிர்கொண்டதால், நாட்டின் வடக்கிலும் வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்ற கவலைகள் இருப்பதாக மாநில சுற்றுச்சூழல் குழுத் தலைவர் பீ பூன் போ கூறினார்.

“நாடு இப்போது மே முதல் ஜூலை வரையிலான இடைப்பட்ட பருவமழை காலத்திற்கு நகர்கிறது. ஆனால் மழை இல்லாதபோது கடல் சூடுபிடித்து, அனல் காற்று வீசுகிறது.

“அது சுமார் 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

மேலும் “தாய்லாந்தில், அவர்கள் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொள்கின்றனர், அது இங்கேயும் நடக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம், ”என்று பீ கூறினார், அத்தோடு மக்கள் தங்களை எப்போதும் நன்கு நீரேற்றமாக வைத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஒட்டுமொத்த வறட்சியானது கட்டுப்பாட்டை மீறி தீக்கு வழிவகுக்கும் என்பதால், திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்க்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

“நாங்கள் அனைத்து தன்னார்வ தீயணைப்புப் படைகளையும் அதிக எச்சரிக்கையாக் வைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

மக்கள், குறிப்பாக உயரமான கட்டிடங்களில் இருப்பவர்கள் தங்கள் குளிரேற்றிகளை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பீ மேலும் வலியுறுத்தினார், ஏனெனில் இவை சுற்றுப்புறங்களுக்கு அதிக வெப்பத்தை சேர்க்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here