இந்தோனேசியாவில் இன்று நண்பகல் 3.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது. ஆனால் சுனாமி ஆபத்து இல்லை என்று நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.