மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆணும், பெண்ணும் கைது

பாலேக் புலாவ்: மோசடி செய்ததாகக் கூறப்படும் 56 மற்றும் 57 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) பினாங்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தென்மேற்கு மாவட்ட காவல்துறை தலைமையகம், சனிக்கிழமை (ஏப்ரல் 15) ஒரு அறிக்கையில், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பதிவான வழக்குகள் தொடர்பாக வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவினால் இங்கும் பேராக்கிலும் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டதாகக் கூறியது.

முதற்கட்ட விசாரணையில், ஆண் சந்தேக நபர் நிலம் வாங்குவதில் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியதாகக் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் பெண் ஆன்லைனில் நாணயங்களை வாங்குதல் மற்றும் விற்பதில் ஈடுபட்டுள்ள கும்பலின் ஏமாற்று (mule ) கணக்கு வைத்திருப்பவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் RM2,130 முதல் RM10,000 வரை இழந்துள்ளனர். மேலும் ஒரு மொபைல் போன் மற்றும் சிம் கார்டையும் போலீசார் கைப்பற்றினர் என்று அது கூறியது. இரண்டு சந்தேக நபர்களும் விசாரணைகளில் உதவுவதற்காக நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here