நோன்புப்பெருநாள் கொண்டாட்டம் : தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் 80 விழுக்காட்டினருக்கு விடுமுறை முடக்கப்பட்டுள்ளது

நோன்புப்பெருநாள் பண்டிகைக் காலத்தின் போது, திடீரென ஏதாவது அவசரநிலை ஏற்படின் தயாராகும் வகையில் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களில் 80 விழுக்காட்டினருக்கு விடுப்பு முடக்கப்பட்டுள்ளது என்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமை இயக்குநர், டத்தோ அப்துல் வஹாப் மாட் யாசின் கூறினார்.

குறித்த 80 விழுக்காடு மொத்தம் 10,174 பணியாளர்களை உள்ளடக்கியது என்றும் இந்த விடுப்பு முடக்குதல் இன்று முதல் ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும்.

“பண்டிகைக் காலங்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்க, நாங்கள் குடியிருப்புகள், வணிக மையங்கள் மற்றும் பிறவற்றை இலக்காகக் கொண்டு தீ பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகிறோம்.

“பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு முன், தங்கள் வளாகங்கள் மற்றும் வீடுகளில் தீ பாதுகாப்பு அம்சங்களை எப்போதும் மேம்படுத்த நினைவூட்டப்படுகிறார்கள், அதனால் தீயினால் வரும் இழப்புகளை குறைக்கலாம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here