7 பேர் பயணித்த கார் 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேர் காயமடைந்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் மோர்னி மாமட் தெரிவித்தார்.
இன்று (ஏப்ரல் 15) செரெண்டா பைபாஸ் அருகே நடந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தததும், கோலா குபு பாரு தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மூன்று சிறுமிகள் பொதுமக்களால் மீட்கப்பட்டனர், மீதமுள்ள 4 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். அத்தோடு 30 வயதுடைய ஒருவரும் காயமடைந்தார் என்று அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை தொடர்கிறது என்று அவர் மேலும் கூறினார்.