கார் விபத்தில் பாகிஸ்தான் மந்திரி பலி

பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான மந்திரி சபையில் மத விவகாரங்களுக்கான மந்திரியாக இருந்து வந்தவர் முப்தி அப்துல் ஷக்கூர். இவர் நேற்று முன்தினம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மரியாட் என்ற இடத்துக்கு அருகே காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார்.அப்போது திடீரென மற்றொரு கார் ஒன்று, மந்திரி முப்தியின் கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே மந்திரியின் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மந்திரி முக்தியின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப், சக மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here