அலோர் காஜாவின் சோலோக் டுகுவில் உள்ள ஜாலான் தஞ்சோங் பிடாராவில், எருமை மாட்டை மோதியதில் 36 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இன்று செவ்வாய்கிழமை (ஏப்ரல் 18) நள்ளிரவு 12.05 மணியளவில் நடந்த விபத்தில், சசாலி முகமது (36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று அலோர் காஜா மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், அர்ஷத் அபு தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் தனது நண்பரைச் சந்தித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென சாலையைக் கடந்த எருமை மாட்டின் மீது அவரது மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.










