கெடாவில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது

அலோர் ஸ்டார் அருகே உள்ள கம்போங் உத்தான் காண்டிஸ் என்ற இடத்தில் இயங்கிவந்த ஒரு சட்டவிரோதமான சூதாட்டக் கூடத்தின் மீது நடத்தப்பட்ட சோதனையில், 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெடா மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் D7 பிரிவுடன் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 20 முதல் 60 வயதுடைய 21 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ வான் ஹசன் வான் அஹ்மட் தெரிவித்தார்.

“கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும், அதில் 19 பேர் உள்ளூர்காரர் மற்றும் இருவர் வெளிநாட்டினர் என்றும் கூறிய அவர், போலீசாரைக் கண்டதும் சந்தேக நபர்கள் ஓட முயன்றனர், ஆனால் போலீசார் துரிதமாக செயற்பட்டு அனைவரையும் கைது செய்தனர் என்றார்.

“இந்தச் சோதனையின்போது, RM17,000 ரொக்க தொகையையும், சூதாட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்” என்றும், கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும், அவர் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பொது இடத்தில் சூதாட்டம் ஆடியதற்காக 1953ன் பிரிவு 7(2)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று ஆர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here