சிங்கப்பூரில் இருந்து நன்னீர் இறால்களை கடத்த முயன்ற நபர் கைது

நன்னீர் இறால் (udang galah) குஞ்சுகளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாக சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார் ஓட்டுநர் ஒருவர் ஜோகூர் தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் திணைக்களம் மற்றும் ஜோகூர் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த காரையும் தடுத்து வைத்தனர்.

குறித்த கார் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) அதிகாலை 1 மணிக்கு சுல்தான் அபுபக்கர் வளாகத்தில் (KSAB) கெலாங் பாத் தாவில் தடுத்து வைக்கப்பட்டதாக ஜோகூர் தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த காரை ஆய்வு செய்ததில், மாற்றியமைக்கப்பட்டிருந்த நான்கு பெட்டிகளில் 400 ரிங்கிட் மதிப்புள்ள சுமார் 100 இறால் குஞ்சுககளைக் கண்டுபிடித்ததாகவும், அவற்றை இறக்குமதி செய்வதற்கு தனியார் வாகனத்தைப் பயன்படுத்த மக்கிஸ் இறக்குமதி அனுமதி மற்றும் சுகாதாரச் சான்றிதழ் இல்லாமல் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

“கடத்தப்பட்ட இறால் குஞ்சுகள் அவற்றுடன் நோய்களைக் கொண்டு செல்லக்கூடும், இது நமது வேளாண்மைத் துறைக்கு அச்சுறுதலாக அமையக்கூடும்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக நடவடிக்கைகளுக்காகவும் விசாரணைகளுக்கு உதவுவதற்காகவும் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here