இந்த ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 22) மலேசியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களாலும் கொண்டாடப்படும் என்று அரசு முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சையத் டேனியல் சையத் அஹ்மட் தெரிவித்தார்.
“மேன்மை தங்கிய பேரரசரின் கட்டளைக்கு இணங்க, அவரின் சம்மதத்தைத் தொடர்ந்து, மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கான நோன்புப் பெருநாள் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை, 2023 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று இதன் மூலம் அறிவிக்கிறேன் ,” என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு, இன்று வியாழன் (ஏப்ரல் 21) இரவு 8 மணிக்கு உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.









