நாட்டின் சில பகுதிகளில் முதல் எச்சரிக்கை நிலை வெப்ப அலை பதிவு

கிளாந்தானில் உள்ள ஜெலி, தானா மேரா, பாசீர் மாஸ் மற்றும் கோலக் கிராய் ஆகிய இடங்களில் வெப்ப அலையானது முதல் நிலை எச்சரிக்கை நிலையில் பதிவாகியுள்ளது.

மேலும் கோலா திரெங்கானு, திரெங்கானுவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெப்பமான வானிலை நிலவுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“வெப்பமான வானிலை எச்சரிக்கை நிலை 1 ல் உள்ளது, இது வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையான அளவாகும் ” என்று மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று காலை வானிலை அறிக்கை வீடியோவில் தெரிவித்தார்.

அத்தோடு மணிக்கு 10 முதல் 20 கிலோமீட்டர் வரையான வேகத்துடன் பல்வேறு திசைகளிலிருந்து காற்று வீசும் என்றும், ஆனாலும் தற்போதைக்கு பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்த எந்த எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் இதுவரை வெளியிடவில்லை.

“தற்போதைய வானிலை முன்னறிவிப்பைப் பொறுத்தவரை, தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வானிலை ஒப்பீட்டளவில் தெளிவாகவும் நன்றாகவும் உள்ளது.

“இருப்பினும், ஜோகூரில் உள்ள கெமாமன், திரெங்கானு மற்றும் பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களில் மழை இன்னும் நீடிக்கிறது. இந்த நிலை காலை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here