கோத்தா கினாபாலுவிலுள்ள மாவு அரைக்கும் ஆலையில் எரிவாயு கசிவு; தொழிலாளி மயக்கம்

இங்குள்ள கோத்தா கினாபாலு தொழிற்பேட்டையில் உள்ள மாவு அரைக்கும் ஆலையில், நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) எரிவாயு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, 27 வயதான தொழிலாளி ஒருவர் அரை மயக்க நிலையிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.25 மணிக்கு தீயணைப்பு துறையினருக்கு அறிக்கை கிடைத்தது, ஏழு ஹஸ்மத் மற்றும் மூன்று அவசர மருத்துவ மீட்பு சேவைகள் (EMRS) பணியாளர்களைக் கொண்ட குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்ட்து என்று, செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அங்கு “கலப்பு LPG (திரவ பெட்ரோலிய வாயு) மற்றும் மெத்தில் புரோமைடு ஆகியவற்றின் எரிவாயு தொட்டியில் இருந்து கசிவு ஏற்பட்டதாக ஹஸ்மத் குழு தெரிவித்தது.

“பாதிக்கப்பட்டவருக்கு ஆம்புலன்ஸில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் மேல் சிகிச்சைக்காக ராணி எலிசபெத் 1 மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here