மக்காவ் மோசடியில் சிக்கி பல் மருத்துவர் RM220,000 இழந்தார்

மக்காவ் மோசடியில் சிக்கி 220,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான பணத்தை இழந்த ஒரு பல் மருத்துவருக்கு இது ஒரு சோகமான நோன்புப்பெருநாளாக மாறியது.

பாதிக்கப்பட்டவரை ஒருவர் தொலைபேசியில் அழைத்து, அவர் காப்பீட்டு மோசடி மற்றும் பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். இதனால் 40 வயதுடைய பல் மருத்துவர் அவமானம் அடைந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி, குறித்த தொகையை திரட்டியதாக கூறப்படுகிறது.

பல் மருத்துவர் தனக்கு எதிரான காப்பீட்டு மோசடி மற்றும் பணமோசடியை முதலில் மறுத்தபோது, அவரை கைது செய்வதாக அச்சுறுத்திமாவட்ட காவல்துறை தலைமையகத்தில் உள்ள “காவல்துறை அதிகாரி” என்று கூறப்பட்ட ஒருவருக்கு அழைப்பு மாற்றப்பட்டது.

“பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், அவரை கைது பண்ணி, சிறையில் அடைத்து வைத்தால் சங்கடமாக இருக்கும் என்று பாதிக்கப்பட்டவருக்கு அந்த காவல்துறை அதிகாரி என பேசியவர் நினைவூட்டினார்”.

பின்னர் குறித்த பல் மருத்துவரிடம் புதிய வங்கிக் கணக்கைத் திறக்கும்படியும், அவரது பணத்தையும் அதில் வைப்பிலிடும் படியும் கூறப்பட்டது.

மோசடிக்காரர்கள் அறிவுறுத்தியபடி செய்து, பல் மருத்துவர் தனது வெவ்வேறு கணக்குகளில் வைத்திருந்த சுமார் RM220,000 புதிய கணக்கிற்கு மாற்றினார்.

பின்னர் அவர் தனது புதிய வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிடுமாறு உத்தரவிடப்பட்டது.

மோசடிகாரர்கள் தொடர்ந்து அதிக பணம் கோரும் போது தான், அவர் தான் குறித்த மோசடிக்காரர்களிடம் சிக்கியிருப்பதை பல் மருத்துவர் உணர்ந்ததாகவும், பல் மருத்துவர் எச்சரிக்கையாவதற்குள், அவரது சேமிப்புகள் அனைத்தும் புதிய கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன.

பின்னர் அவர் போலீசில் புகார் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here