அலோர் ஸ்டார் ஷாஹாப் பெர்டானாவில் உள்ள தங்கு விடுதி முன் நேற்று நடந்த கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 46 வயது நபரை போலீசார் இன்று கைது செய்தனர். இந்த சம்பவத்தின் 41 வினாடி வீடியோ கிளிப் நேற்று வைரலாக பரவியது. பாதிக்கப்பட்டவர் ஒரு வாகனத்தின் பின் இருக்கையில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டபோது உதவிக்காக அலறுவதைக் காட்டுகிறது.
தாக்குதலாளிகள் பாதிக்கப்பட்டவரை அடிபணிய வைக்க அவரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது. சம்பவத்தை பதிவு செய்த நபர் தாக்குதல் நடத்தியவர்களை பார்த்து அலறுவது கேட்கிறது. சம்பவத்தின் போது வீட்டில் இருந்த பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் கடத்தல் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
வீடியோ பாதிக்கப்பட்டவரின் பெற்றோருக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட 27 வயதுடையவர் பல ஆடவர்களாலும் ஒரு பெண்ணாலும் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிய வந்தது. மற்ற சந்தேக நபர்களை அடையாளம் காண போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக அஹ்மட் சுக்ரி கூறினார்.
நாங்கள் பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். கடத்தலுக்கான காரணத்தை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, இன்னும் வழக்கை விசாரித்து வருகிறோம் என்று அவர் இன்று கூறினார். கடத்தல் குற்றவியல் சட்டத்தின் 362 ஆவது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக சுக்ரி மேலும் கூறினார்.









