மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா (ஏப்ரல் 25) பிற்பகல் பகாங்கில் உள்ள பெக்கானில் அவசர ஊர்திக்கு (ஆம்புலன்ஸுக்கு) வழிவகுத்து ஒரு சிறந்த முன்மாதிரியை அமைத்தார்.
இஸ்தானா நெகாரா ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட 11 வினாடி வீடியோவில், அப்போது வாகனம் ஓட்டிய சுல்தான் அப்துல்லா, சைரன் போட்டு ஆம்புலன்ஸுக்கு வழி கொடுப்பது தெரிந்தது.
பதிவின் படி, மாமன்னர் பெக்கானில் இருந்து குவாந்தனில் உள்ள இஸ்தானா அப்துல்அஜிஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவசர சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ், அவரது மாட்சிமையின் வாகன அணிவகுப்பின் பின்னால் வந்தது.
Agong gives way to ambulance while driving https://t.co/NpzsJwI4wt pic.twitter.com/0h5UCTuSeV
— BERNAMA (@bernamadotcom) April 25, 2023









