கோலாலம்பூர்,
வீடுகள், பொது கழிப்பறைகள் மற்றும் பூங்காக்கள் போன்ற வசதிகளை உள்ளடக்கிய முக்கிய கட்டடத் திட்டங்களுக்கு விற்பனை மற்றும் சேவை வரி (SST) விலக்கு வழங்கப்படுவதாக துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அஹமட் மஸ்லான் அறிவித்துள்ளார்.
சீமெந்து, மணல் மற்றும் கிராவல் (aggregate gravel)உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் SST-இல் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இது மேம்பாட்டாளர்களின் சுமையை குறைத்து, அடித்தள திட்டங்கள் தொடர வழிவகுக்கும்.
மேலும் வீடுகள், வழிபாட்டு இடங்கள், பொது பூங்காக்கள் உள்ளிட்டவை SST-இல் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. RM1.5 மில்லியனை விட குறைவாக வருமானம் பெறும் சப் கான்ட்ராக்டர்களுக்கு SST விதிப்பதில் விலக்களிக்கப்படுகின்றது என்றார் அவர்.
SST அமலாக்கத்தை திறம்படச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்எனவும் மேலும், கட்டுமானத் துறையில் SST பதிவு வரம்பை RM1.5 மில்லியனில் இருந்து RM3 மில்லியனாக உயர்த்துவது குறித்து இப்போது எந்த விவாதமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.























