ஜோகூரில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்றதாக 36 பேர் கைது

பட்டாசு விற்பனைக்கான உரிமம் மற்றும் அனுமதியை இன்றி தடை செய்யப்பட்ட பட்டாசு சார்ந்த பொருட்களை விற்பனை செய்த 36 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மார்ச் 28 முதல் ஏப்ரல் 26 வரையிலான அமலாக்கக் காலத்தில், மொத்தம் 712 பட்டாசுகள் மற்றும் பட்டாசுகள் சார்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.

“கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் ஜோகூர் பாருவைச் சுற்றியுள்ள பசாகளிலும், வணிக வளாகங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

வெடிபொருள் சட்டம் 1957 (சட்டம் 207) பிரிவு 8 இன் கீழ் 33 விசாரணைப் பாத்திரங்கள் திறக்கப்பட்டன, இது குற்றம் நிருபிக்கப்பட்டால், பட்டாசுகளை விற்றதற்காக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here