மாநில தேர்தல் : பினாங்கு PH, UMNO ஆகியவற்றுக்கிடையிலான இடப் பங்கீடு தொடர்பில் அடுத்த வாரம் விவாதம்

பினாங் மாநிலத் தேர்தல் தொடர்பான இடப் பங்கீடு மற்றும் பிரச்சனைகளைப் பற்றி கலந்தாலோசிக்க அம்மாநில பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் அம்னோ ஆகியவை அடுத்த வாரம் முதல் முறையாக ககூடுகின்றன.

மாநில தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்கள் தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்துமாறு UMNO விடம் இருந்து தமது கட்சிக்கு கோரிக்கை வந்துள்ளதாக பினாங்கு மாநில PH தலைவர் சௌ கோன் இயோவ் கூறினார்.

“முதலில் பக்காத்தான் ஹராப்பான் இந்த வாரம் ஒரு கூட்டத்தை நடத்தும், பின்னர் அம்னோ உடனான சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறும், ஆனால் எந்த இடத்தில் கூடுவது என இன்னும் தீர்மானிக்கப்படவில்லை,” என்று அவர் இன்றுநடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here