விருது பெற்ற மலேசிய நடிகர் ரிட்சுவான் ஹாஷிம் காலமானார்

நடிகர் முகமட் ரிட்சுவான் ஹாஷிம் மாரடைப்பு காரணமாக இன்று தனது 61வது வயதில் காலமானார்.

முகமட் ரிட்சுவான் கோலாலம்பூர் மருத்துவமனையில் இன்று பிற்பகல் 1.57 மணிக்கு இறந்ததாக அவரது மருமகன் இமான் சுல்கர்னைன், 32, உறுதிப்படுத்தினார்.

“இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு CPR சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், காலை 11 மணிக்கு HKL க்கு அனுமதிக்கப்பட்டார் என்று அவர் மேலும் கூறினார்.

முகமட் ரிட்சுவானுக்கு கடந்த மூன்று வருடங்களாக இதயப் பிரச்சனைகள் இருப்பதாக அவர் கூறினார்.

பல மலேசிய வெற்றிப்படங்களை நடித்த இவர், 9வது மலேசிய திரைப்பட விழாவில் Hati Bukan Kristal திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

அவரது இறப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு சினிமா நடிகர்களும் ரசிகர்களும் தமது அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here