ஃபைபர் இழுக்கும் இயந்திரத்தில் சிக்கி வெளிநாட்டு ஆடவர் பலி

ஷா ஆலம்: ஃபைபர் இழுக்கும் இயந்திரத்தால் நசுக்கப்பட்ட வெளிநாட்டு தொழிலாளி இறந்தார். சனிக்கிழமை (மே 6) காலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுக் கட்டளை மையத் தலைவர் சுல்பிகர் ஜாஃபர் தெரிவித்தார்.

நாங்கள் துயர அழைப்பைப் பெற்றோம். உடனடியாக தீயணைப்பு இயந்திரம் மற்றும் ஒரு அவசர மருத்துவ மீட்பு சேவை வாகனத்தை 10 பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பினோம்.

அவர்கள் காலை 7.17 மணிக்கு ஜாலான் புக்கிட் கெமுனிங்கில் உள்ள தொழிற்சாலைக்கு வந்தடைந்தனர். ஃபைபர் இழுக்கும் இயந்திரத்தின் உருளைகளில் ஒரு வங்களா தேச நபர் இழுக்கப்பட்டதைக் கண்டறிந்தனர் என்று அவர் சனிக்கிழமை தொடர்பு கொண்டபோது கூறினார்.

பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞரை இயந்திரத்திலிருந்து விடுவிக்க சுமார் 10 நிமிடங்கள் எடுத்ததாக அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளார் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது  என்று அவர் கூறினார். பலியானவர் முகமட் சுருஜ் அலி என்று அடையாளம் காணப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here