NCER மூலம் RM78.95 பில்லியன் முதலீடு, 23,000 புதிய வேலைவாய்ப்புகள் பதிவு – பிரதமர்

கோலாலம்பூர்:

கோலாலம்பூர்: வடக்கு காரிடார் பொருளாதார மண்டலம் (NCER), 2025-ஆம் ஆண்டில் RM78.95 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளைப் பெற்றுள்ளதோடு, 23,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் தலைமையில் நடைபெற்ற 35-வது வடக்கு காரிடார் அமலாக்க ஆணைய (NCIA) கூட்டத்தில் இந்தச் சாதனைகள் குறித்துத் தெரிவிக்கப்பட்டதாக அவர் தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, NCER தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மைய (NTIC) திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 4,000 உள்ளூர் திறமையாளர்களை NCER உருவாக்கியுள்ளது.

இக்கூட்டத்தில் 2026-ஆம் ஆண்டு மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வடக்கு பிராந்தியத்தில் உயர்தர முதலீடுகளை விரைவுபடுத்துவதில் NCER-ன் பங்கை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

கெடா ரப்பர் சிட்டி (KRC) மற்றும் பெர்லிஸில் உள்ள சுபிங் பள்ளத்தாக்கு தொழில்துறை பகுதி (CVIA) தொடர்பான சில சாத்தியமான முதலீடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மலேசியா-தாய்லாந்து எல்லைப் பகுதியில் முதலீட்டுச் சூழல் மேம்பாட்டின் தாக்கத்தை விரிவுபடுத்துவதற்கான முன்முயற்சிகள் குறித்தும், லங்காவி தீவின் சுற்றுலாப் போட்டித்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஆய்வுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here