தேசிய முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக மாட்டார்கள்: ஜாஹிட் தகவல்

ஜாஹிட்

அரசாங்கத்தை சீர்குலைக்கும் மற்றும் கவிழ்க்கும் முயற்சியில் தேசிய முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இடத்தைக் காலி செய்ய மாட்டார்கள் என்று கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார்.

அம்னோவின் தலைவரான அஹ்மட் ஜாஹிட், இடைத்தேர்தலை கட்டாயப்படுத்துவதற்காக பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்ற வதந்திகள் உண்மைக்குப் புறம்பானது என்றார். பாரிசன் ஒற்றுமை அரசாங்கத்தில் உறுதியாக உள்ளது.

13 அல்லது 15 பேர் ராஜினாமா செய்வதன் மூலம் சிலர் மதானி அரசாங்கத்தை சீர்குலைக்க விரும்புவதாக (வதந்திகள்) நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மை என்னவென்றால், ஒருவர் கூட தங்கள் இடத்தைக் காலி செய்யமாட்டார்கள் என்பதை எனது சொந்த விசாரணைகள் காட்டுகின்றன என்று அவர் பேராக் அம்னோவில் தனது உரையில் கூறினார்.

மேலும், மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட், லெங்காங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஷம்சுல் அனுவார் நசரா மற்றும் பேராக் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோப் ஆகியோரும் கலந்து கொண்டனர். இடைத்தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் 15 தேசிய முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இடங்களை காலி செய்யவுள்ளதாக ஊகங்கள் எழுந்துள்ளன.

பெரிகாத்தான் நேஷனல்  தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தனக்குப் பிரதமராகப் பதவியேற்க பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் காட்ட போதுமான சட்டப்பூர்வ அறிவிப்புகளைச் சேகரித்ததாக சமூக ஊடகங்களில் கூற்றுக்கள் இருந்தன. இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆறு மாநில தேர்தல்கள் குறித்து, அஹ்மத் ஜாஹிட், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள பல்வேறு கட்சி இயந்திரங்களுக்கிடையேயான ஒத்துழைப்பும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான ஒத்துழைப்பும் மேம்பட்டு வருவதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here