கெடாவில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் சந்தித்த அன்வார்,சனுசி

அலோர் ஸ்டார்:

இன்று விஸ்மா டாருல் அமானில் நடைபெற்ற கெடா மாநில சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

மாலை 5 மணிக்கு கெப்பலா பாத்தாஸ் சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையத்தை (LTSAH) வந்தடைந்த பிரதமரை, மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் வரவேற்றார்.

பின்னர் இருவரும் ஒரே வாகனத்தில் விஸ்மா டாருல் அமானுக்குச் சென்று, கூட்டத்தைத் தொடங்கும் முன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அந்த சிறப்புக் கூட்டத்தில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் கெடா மாநில மேம்பாட்டு நடவடிக்கை கவுன்சிலின் தலைவரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here