கோலாலம்பூர் காவல்துறை சிறப்பு பிரிவின் இடைக்கால தலைவராக அபு சாமா நியமனம்

கோலாலம்பூர் காவல்துறை சிறப்புப் பிரிவின் இடைக்கால தலைவராக டத்தோ அபு சாமா முகமட் நூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த பதவியில் இருந்த டத்தோ யஹாயா உத்மான் பகாங் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், அவருக்கு பதிலாக இன்று முதல் இடைக்கால தலைவராக டத்தோ அபு சாமாவின் நியமனம் அமலுக்கு வருக்கிறது.

புக்கிட் அமான் நிர்வாக இயக்குனர் டத்தோ அஸ்மி அபு காசிம் முன்னிலையில் இன்று கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் பணி ஒப்படைப்பு விழா நடைபெற்றது. புதிய கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜெயின் பணிக்கு வரும் வரை அபு சாமா அந்தப் பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

முகமட் ஷுஹைலி இப்போது பினாங்கு காவல்துறைத் தலைவராக உள்ளார், அதே நேரத்தில் அபு சாமா கெடா துணை காவல்துறைத் தலைவராக மே 22 முதல் பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here