கொள்ளையர்களின் தந்திரோபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு டிக்டாக் பயனர் அறிவுறுத்துகிறார்

கோலாலம்பூர்: டிக்டாக் பயனர் ஒருவர் சமீபத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார், அங்கு அவர் சமீபத்தில் தனது கார் கண்ணாடியில் தெரியாத திரவத்தைக் கண்டுபிடித்தார். அது அவரது பார்வை தன்மை குறைந்தது.

இது கொள்ளையர்களால் பயன்படுத்தப்படும் ஒரு புதிய தந்திரமாக இருக்கலாம் என்று அவர் நம்பினார். மேலும் சாலையில் செல்லும் போது வாகனமோட்டிகளை எச்சரிக்கையுடன் செயல்படுமாறு எச்சரித்தார்.

@niqmirul என்ற பயனர், நெகிரி செம்பிலானில் உள்ள ஜாலான் பெடாஸ் – லிங்கி சாலையில் பயணம் செய்யும் போது, ​​முதலில் தனது கண்ணாடியில் விழுந்த பொருள் தண்ணீர் அல்லது பறவை எச்சம் என்று தான் நினைத்ததாகக் கூறினார்.

ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்த அவர், wiperயை பயன்படுத்தாமல் தனது இலக்கை அடையும் வரை காத்திருந்தார். wiperயை  இயக்கியவுடன் கண்ணாடி பனிமூட்டமாக மாறியதாகத் தெரிவித்தார்.

கண்ணாடி அழுக்காக இருப்பதால், சாலையோரம் நிறுத்தி சுத்தம் செய்யலாம். அப்போதுதான் கொள்ளையர்கள் வரக்கூடும். கவனமாக இருங்கள் என்று அவர் தனது வீடியோவில் கூறினார். இது இதுவரை 200,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here