12 நெடுஞ்சாலை குத்தகையாளர்கள் திறந்த சுங்கக் கட்டண முறையை செயல்படுத்த ஒப்புதல் – பொதுப்பணி அமைச்சர்

வரும் செப்டம்பரில் தொடங்கும் திறந்த கட்டண முறையை செயல்படுத்த, நாட்டிலுள்ள மொத்தம் 12 நெடுஞ்சாலை குத்தகையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

குறித்த குத்தகை நிறுவனங்களில் டூத்தா-உலு கிள்ளான் நெடுஞ்சாலை (DUKE), டமான்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலை (LDP), SPRINT நெடுஞ்சாலை, ஷா ஆலம் நெடுஞ்சாலை (KESAS), SMART சுரங்கப்பாதை, கோலாலம்பூர்-புத்ராஜெயா நெடுஞ்சாலை (MEX), சுங்கை பெசி நெடுஞ்சாலை, NPE நெடுஞ்சாலை, அம்பாங்-கோலாலம்பூர் இரட்டை அடுக்கு நெடுஞ்சாலை (AKLEH) Guthrie நெடுஞ்சாலை, பினாங்கு பாலம் மற்றும் பட்டர்வெர்த் நெடுஞ்சாலை (BKE) ஆகியவை அடங்கும்.

” திறந்த கட்டண செயல்முறையை அமல்படுத்த மேற்கூறப்பட்ட 12 நிறுவனங்கள் இதுவரை ஒப்புக்கொண்டுள்ளன. ஏனையவை இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளன, மேலும் இந்த திட்டத்தில் பல நிறுவனங்கள் பங்கேற்க முன்வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று நந்தா கூறினார்.

கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் டோல் செலுத்துவதால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்களை ஆராய்வது முக்கியம் என்பதால், நெடுஞ்சாலை குத்தகையாளர்களுடனான விவாதங்களுக்கு நீண்ட நேரம் எடுத்ததாக நந்தா மேலும் கூறினார்.

“அனைத்து பாதுகாப்பு சிக்கல்களும் ஏற்படாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம், எனவே செயல்படுத்துவதை அவசரப்படுத்த முடியாது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here