தனியார் பள்ளிக்குள் புகுந்த மூன்று வெளிநாட்டினர் கைது

கடந்த சனிக்கிழமையன்று தாமான் அம்பாங் உத்தாமாவில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் நுழைந்ததாக நம்பப்படும் மூன்று வெளிநாட்டு ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

காலை 11 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், தனியார் பள்ளியின் நடத்துனரான 39 வயதுடைய வெளிநாட்டவர் ஒருவர் தகவல் அளித்ததாக, அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறையின் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் கூறினார்.

புகார்தாரரின் கூற்றுப்படி, அவர் தனது அலுவலகத்திற்கு வந்தவுடன், சம்பந்தப்பட்ட அறையின் ஜன்னல் பூட்டப்படவில்லை என்பதையும், உள்ளே யாரோ வந்து சென்றிருப்பது போன்ற அறிகுறிகள் இருப்பதையும் உணர்ந்தார். “பின்னர் புகார்தாரர் ஆய்வு செய்ததில், அவரது அலுவலகத்தில் ஒரு டிகோடர் மற்றும் முதல் தளத்தில் உள்ள கணினி ஆய்வகத்தில் உள்ள பல்வேறு வகையான 13 மடிக்கணினிகள் காணாமல் போனதைக் கண்டறிந்தார், அவை திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது, அவற்றின் மதிப்பு சுமார் RM8,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரைத் தொடர்ந்து, நேற்று மதியம் 3.50 மணியளவில் தனியார் பள்ளியில் 19 முதல் 20 வயதுடைய முன்னாள் மாணவர்கள் உட்பட மூன்று வெளிநாட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட் டவர்களிடமிருந்து ஒரு பை, எட்டு மடிக்கணினிகள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.

“திருட்டுக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 457 இன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here