17 வயது சிறுவன் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், நீரில் மூழ்கி உயிரிழந்தார்

பெந்தோங்கிலுள்ள கம்போங் கபோங், ஓராங் அஸ்லி செட்டில்மென்ட், D’Kasai Riverside (Monkey Rock)என்ற இடத்தில் ஆற்றில் தவறி விழுந்ததில், பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பதின்ம வயது சிறுவன், நேற்று இரவு நீரில் மூழ்கி இறந்து கிடந்தான்.

பெல்டா லாக்கும், லஞ்சாங்கில் வசிக்கும் 17 வயதான முஹமட் சயாபிக் அக்மல் ஜைதி என்பவரின் சடலம் இரவு 9.35 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுவன் மூன்று நண்பர்களுடன் மாலை 5.10 மணியளவில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது என்று, பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சுல்பாட்லி சகாரியா கூறினார்.

பாதிக்கப்பட்டவர் இறுதியாக காணப்பட்டதாக நம்பப்படும் இடத்திலிருந்து சுமார் சற்று தொலைவில் மூன்று மீட்டர் ஆழத்தில் நீர் மீட்புப் படையால் (PPDA) அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

“இருப்பினும், பாதிக்கப்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து வலுவான நீரோட்டத்தால் எடுத்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here