பெட்டாலிங் ஜெயா: மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் (பிரெஸ்மா) உறுப்பினர்கள் தங்களுடைய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அனுமதி பெறுவதற்கான சுமையான செயல்முறையால் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என்று அதன் தலைவர் டத்தோ ஜவஹர் அலி தய்யூப்கான் கூறுகிறார்.
இது பல மாதங்களாக நடந்து வருகிறது. எங்கள் உறுப்பினர்கள் பலர் உள்துறை அமைச்சகத்துடன் நிலைமையை முன்னிலைப்படுத்த எங்கள் உதவியைக் கோரியுள்ளனர் என்று அவர் கூறினார். எழுப்பப்பட்ட பிரச்சினைகளில் ஒன்று, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் தங்கள் வரிசை எண் முடிந்துவிடுவது குறித்து கவலையடைந்தனர்.
Kompleks PKNS Shah Alamஇல் கதவு திறக்கும்போது, மக்கள் விரைந்து சென்று ஒருவரையொருவர் தள்ளுமுள்ளு நடக்கிறது என்று அவர் கூறினார். இது பாதுகாப்பற்றதாக இருக்கலாம். குறிப்பாக சில வயதான முதலாளிகளுக்கு என்றார்.
சிலாங்கூர் குடிவரவுத் தலைமையகம் Kompleks PKNS Shah Alamஇல் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ளது. மக்கள் அலுவலகத்தை அடையும் போது, வழக்கமாக நீண்ட வரிசை இருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் அவர்களுக்கு எண் கிடைக்கும்; இல்லையெனில், அவர்கள் செயல்முறையை மீண்டும் செய்ய மற்றொரு நாள் செல்ல வேண்டும்.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் காகிதமில்லா நடைமுறைகளுக்கு நாடு நகர்ந்து வரும் நிலையில், இந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் அனைத்து ஆவணங்களையும் குடிநுழைவு அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார். உதாரணமாக, தொழிலாளர் Visa with Reference (VDR) ஆன்லைனில் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, விசா கட்டணத்தை செலுத்துதல் மற்றும் VDR அச்சிடுதல் ஆகியவை ஆன்லைனில் செய்யப்படலாம்.
ஆனால் இப்போது நாம் முதலில் முகப்பிடத்தில் பணம் செலுத்திவிட்டு இன்னொரு நாள் அதனை பெற்று கொள்ள செல்ல வேண்டும். இரண்டு கட்டண முகப்பிடங்கள் மட்டுமே இருப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. பெரும்பாலான நேரங்களில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது என்று அவர் கூறினார்.பிரெஸ்மா அமைச்சகத்திடம் சிக்கலை முன்னிலைப்படும். டத்தோ ஜவஹர் சிலாங்கூர் குடிவரவுத் துறை அலுவலகத்தை மிகவும் பொருத்தமான வளாகத்திற்கு மாற்றவும் பரிந்துரைத்தார்.








