சரவாக் உட்பட நாட்டின் ஐந்து பகுதிகளுக்கு முதல் நிலை வெப்பநிலை எச்சரிக்கை -மலேசிய வானிலை ஆய்வு மையம்

தீபகற்ப மலேசியாவின் நான்கு பகுதிகளும் சரவாக்கில் ஒரு பகுதியும் முதல் நிலை வெப்பமான காலநிலையை எதிர்கொள்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம், இன்று பிற்பகல் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், குறித்த 5 பகுதிகளுக்கு முதல் நிலை வெப்பநிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் பாசீர் மாஸ் மற்றும் கோலக்கிராய், கிளாந்தான், ரவூப் மற்றும் பெந்தோங், பஹாங் ஆகிய நான்கு இடங்களும், சரவாக்கில் உள்ள செலாங்காவ் என்ற 5 பகுதிகளும் இந்த வானிலையை அனுபவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கை நிலை குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு அதிகபட்ச தினசரி வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்” என்று அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here