கினபாலு பூங்கா உலகளாவிய ‘யுனெஸ்கோ’ நிலவியல் பூங்காவாக பிரகடனம்

சாபா மாநிலத்தில் இருக்கும் கினபாலு நிலவியல் பூங்கா, உலகளாவிய ‘யுனெஸ்கோ’ நிலவியல் பூங்காவாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

சாபா மாநில முதலமைச்சர் ஹஜிஜி நூர் நேற்று இதை மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார்.

போர்னியோ தீவின் வடக்கு முனையில் உள்ள சபா மாநிலத்தில் உள்ள கினாபாலு பூங்கா, இமயமலைக்கும் நியூ கினியாவிற்கும் இடையே உள்ள மிக உயரமான மலையாகும். 4,750 சதுர அடியைக் கொண்ட இப்பூங்கா கினபாலு மலையில் அமைந்துள்ளது.

இது வளமான வெப்பமண்டல தாழ்நிலம் மற்றும் மலை மழைக்காடுகள் முதல் வெப்பமண்டல மலைக்காடுகள், சப்-ஆல்பைன் காடுகள் மற்றும் உயரமான இடங்களில் புதர்க்காடுகள் வரை பரவலான வாழ்விடங்களைக் கொண்டுள்ளது. அத்தோடு தென்கிழக்கு ஆசியாவிற்கான தாவர பன்முகத்தன்மையின் மையமாக ;யுனெஸ்கோ’ வினால்அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here