ஜோகூர் மாநிலத்தில் ‘sex party’ நடைபெறாது என்று இஸ்லாமிய அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்

ஜோகூர் பாருவில் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் sex party “பாலியல் விருந்து” மாநிலத்தில் எங்கும் நடக்காது என்று ஜோகூர் இஸ்லாமிய சமயத் துறை (JAINJ) உறுதி அளித்துள்ளது.

இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையுடன் இணைந்து துறை இணைந்து செயல்படும் என்று மாநில இஸ்லாமிய சமய விவகாரக் குழுத் தலைவர் ஃபேர்ட் காலிட் தெரிவித்தார்.

ஒழுக்கக்கேடான செயற்பாடுகளை ஊக்குவித்த டுவிட்டர் கணக்கு மூடப்பட்டுள்ள போதிலும், இவ்விவகாரத்தில் ஈடுபட்டதாக இனங்காணப்பட்ட சமூக வலைத்தளங்களை தொடர்ந்து கண்காணிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை, வேறு எந்த ‘பாலியல் விருந்து’ அறிவிப்பும் வெளியாகவில்லை. அமைப்பாளர்கள் என்ன திட்டமிட்டாலும், அது நடக்காமல் பார்த்துக் கொள்வோம், அதுதான் எங்களின் அர்ப்பணிப்பு,” என்று அவர் இங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதுபோன்ற ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் குறித்த எந்த தகவலையும் காவல்துறை அல்லது JAINJ அனுப்புமாறு அனைத்து தரப்பினரையும் ஃபேர்ட் கேட்டுக் கொண்டார்.

உங்கள் (அமைப்பாளர்) அடையாளம் ஏற்கெனவே அறியப்பட்டுள்ளது. நீங்கள் மறைக்க முயற்சி செய்யலாம் ஆனால் நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்று அவர் கூறினார். பாலியல் விருந்து ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் நபர்களைக் கண்டுபிடித்ததற்காக காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்.

நகரில் ‘பாலியல் விருந்துக்கு’ பங்கேற்பாளர்களை அழைக்கும் ட்விட்டரில் ஒரு ஆன்லைன் போஸ்டர் சமீபத்தில் வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here