நான்கு மாதங்கள் கர்ப்பமாக இருந்த தனது காதலியை கொலை செய்து, எரித்த குற்றச்சாட்டில் ஆடவர் மீது இன்று, சுங்கை பெசார் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது.
காலை 8.55 மணியளவில் மஞ்சள் சட்டை அணிந்த சந்தேக நபரை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
முன்னதாக, சுங்கை பெசார், கம்போங் சுங்கை லிமாவ்வில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் எரிந்த நிலையில் நான்கு மாத கர்ப்பிணியான 21 வயது பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
சந்தேகநபர் இந்த குற்றத்தை தனியாக செய்திருக்கலாம் எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பு கொண்டு கர்ப்பத்தை இரகசியமாக வைத்திருப்பதே கொலைக்கான நோக்கம் எனவும் போலீசார் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் காதலர்கள் என்பதுடன், இருவரும் ஒரு வருடமாக உறவுமுறையில் இருந்துள்ளனர் எனவும் அறியமுடிகிறது.
குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.