பினாங்கில் கார் மீது ‘மாட் ரெம்பிட்’ மோதிய காட்சிகள் வைரலாகின்றன

ஜார்ஜ் டவுன்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சமிஞ்சை விளக்கை மீறி சென்று  கார் மீது மோதிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு சிறிய வீடியோக்கள், ஒன்று ஆறு வினாடிகள் மற்றும் மற்றொன்று ஒன்பது வினாடிகள் நீளமானது, பயான் பாரு ரவுண்டானாவிற்குப் பிறகு, ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் அதிவேகத்தில் செல்வதைக் காட்டுகிறது.

முன்னால் பைக் ஓட்டுபவர் “சூப்பர்மேன்” ஸ்டண்ட் செய்வதை காணமுடிகிறது. மேலும் இருவரும் சிவப்பு நிறத்தில் இருக்கும் சமிஞ்சை விளக்கை நெருங்கும்போது வேகமாகச் செல்கிறார்கள்.

எதிர் திசையில் இருந்து வரும் ஒரு கார் U-டர்ன் செய்யும் போது திடீரென்று வந்த  முதல் மோட்டார் சைக்கிளோட்டி  வேகத்தை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முடியாமல், காரின் மீது மோதினார். அதே நேரத்தில் இரண்டாவது மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் வாகனத்தை மோதாமல் தவிர்க்கிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here