புக்கிட் ராஜாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப அனுமதி

கிள்ளான், புக்கிட் ராஜா பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக வெளியேற்றப்பட்ட 16 குடும்பங்களைச் சேர்ந்த 70 நபர்கள், அப்பகுதியில் நீர் வடிந்ததை அடுத்து, நேற்று தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் இன்னும் சில பகுதிகளில் நீர் முழுமையாக வடியவில்லை என்று, சிலாங்கூரில் உள்ள மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்தது.

“பண்டார் புக்கிட் ராஜா மசூதியில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட தற்காலிக வெளியேற்ற மையம் இன்று காலை வரை திறந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் கிள்ளான் மாவட்டம் மற்றும் நில அலுவலகத்தின் மூடல் உத்தரவுக்காக காத்திருக்கிறது,” என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சிலாங்கூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 4) அதிகாலை 4 மணி முதல் தொடர்ந்து பல மணி நேரம் பெய்த கனமழை காரணமாக புக்கிட் ராஜா, மேரு மற்றும் சுங்கை பூலோ ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here