ரஷியா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று கெர்சன் நகருக்கு அருகே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள அணையில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது. மேலும் இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் தென் உக்ரேனில் உள்ள பெரிய அணை ஒன்றில் தாக்குதல் நடந்துள்ளது. அதில் அணை சேதமடைந்ததாகவும், அணையில் இருந்த தண்ணீர் வெளியேறிவருவதாகவும் கூறப்படுகிறது.
தண்ணீர் இரு நாட்டுப்பகுதிகளிலும் ஓடுவதாகவும் அதனால் பெரும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. அது குறித்த படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
டினீப்ரோ ஆற்றில் கட்டப்பட்டுள்ள நோவா ககோவ்கா அணையை ரஷ்யா வேண்டுமென்றே நிரம்பச் செய்து உடைத்து விட்டதாகவும், பாதிப்பு உள்ளாகும் இடத்தில் உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் உக்ரேன் குற்றஞ்சாட்டியுள்ளது.

அணை கிட்டத்தட்ட 30 மீட்டர் உயரமும் ஏறத்தாழ 3.2 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. அது 1956ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அணையை 2014ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக்கொண்டது ரஷ்யா.
அணை முழுமையாக சேதமடையவில்லை என்று உக்ரேன் தெரிவித்துள்ளது. இருப்பினும் அணை உடைந்தால் அது மாபெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அணையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் 18 மில்லியன் கன மீட்டர் நீர் வெளியேறிவருகிறது எனவும் ,இதனால் கரையோரம் உள்ள ஆயிரகணக்கான மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம்,ஆற்றின் வலது கரையில் உள்ள 10 கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்பவர்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது. மேலும் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான ஜபோரில்லால்யா பகுதியில் அணுமின் நிலையம் உள்ளது.இதற்கு காக்கோவ்க நீர்தேக்கதிலிருந்துதான் குளிரூட்டுவதற்கு தேவையான நீர் வழங்கப்படுகிறது.நீர் வழங்கப்படாவிட்டால் அணுமின் நிலையம் பாதிக்கபடும் எனக் கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து ,சர்வதேச அணு சக்தி கூட்டமைப்பு தனது டுவிட்டரில், உடனடியாக அணுமின் நிலையத்திற்கு ஆபத்து இல்லை, என பதிவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். இதற்கு முன்னர் கெர்சன் பகுதி இராணுவத் தலைவர் காலை 7 மணிக்கு வெளியிட்ட காணொளியில் ,ரஷிய இராணுவம் மேலும் ஒரு பயங்கரவாத செயலை செய்துள்ளது. மேலும் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் அளவு 5 மணி நேரத்தில் முக்கிய கட்டத்தை எட்டும் என கூறினார்.




















