விரைவில் நடிகர் பிரபாஸுக்கு பிரபல நடிகையுடன் திருமணம்

தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் அடையாளமின்றி இருந்த பிரபாஸுக்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் அவர் உலகம் முழுக்க புகழ் அடைந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்தார்.

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பல கோடி போட்டு அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் படையெடுத்து வந்தார்கள். அதன் பின்னர் சாஹோ, ஆதிபுருஷ் போன்ற படங்கள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டும் தோல்வியடைந்தது. ஆதிபுருஷ் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை கிருத்தி சனோனை பிரபாஸ் காதலித்து வருகிறார்.

அப்படத்தின் ஷூட்டிங்கில் கிருத்தி சனோனிடம் நடிகர் பிரபாஸ் நேரடியாகவே புரபோஸ் செய்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து கிருத்தி சனோனும் அவரது காதலை ஏற்றுக்கொண்டதால், இருவரும் பாலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் விழாவில் பிரபாஸிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, “கல்யாணம் என்றாவது ஒரு நாள் நடக்கும். ஆனால் கண்டிப்பாக திருப்பதியில் தான் என்னுடைய திருமணம் நடக்கும்”. என கூற கிருத்தி சனோன் வெட்கத்தோடு சிரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here