நடிகர் பிரபுதேவா கடந்த 1995ஆம் ஆண்டு ரம்லத்தை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2011ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2019இல் முதுகுவலி காரணமாக மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரபுதேவா சிகிச்சை பெற்றார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் காதல் மலர்ந்தது.
2020ஆம் ஆண்டு ஹிமானி சிங்கை, பிரபுதேவா திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் ரகசியமாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சமீபத்தில் மனைவி ஹிமானியுடன் பிரபுதேவா திருப்பதியில் தரிசனம் மேற்கொண்டார். அப்போதுதான் ஹிமானி சிங் புகைப்படம் வெளியானது
தற்போது பிரபுதேவா-ஹிமானி சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரபுதேவா-ரம்லத்துக்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ளனர். இப்போது முதல் பெண் குழந்தைக்கு பிரபுதேவா தந்தையாகி இருக்கிறார்.






















