பூமிக்கு பல மைல்களுக்கு அப்பால் விண்வெளியில் மலர்ந்த முதல் மலர்

பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் அனைத்துலக விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஜின்னியா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர்.

முதன்முறையாக ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த ஜின்னியா மலர்தான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பரிசோதனையானது 2015-ல் நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரெனால் தொடங்கப்பட்டது. மைக்ரோகிராவிட்டி எனப்படும் நுண்ஈர்ப்பு விசையில் தாவரங்களும் மலர்களும் எப்படி வளர்கின்றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள வாய்ப்பாக நாசா விஞ்ஞானிகள் இந்த மலர்ச்செடியை அனைத்துலக விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர்.

இந்த மலரை மலரச் செய்ததன் மூலம் விண்வெளியில் அதிக தாவரங்களை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here