2016 முதல் கிள்ளான் ஆற்றில் இருந்து 86,021 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன

2016 ஆம் ஆண்டு முதல் கிள்ளான் ஆற்றில் இருந்து அகற்றப்படும் குப்பைகளின் அளவு ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வரும் அதே வேளையில், ஆற்றின் நீரின் தரம் மெதுவாக மேம்பட்டு வருவதாக இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

தண்ணீரின் தரம் முன்பு நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் இருந்தது, ஆனால் தற்போது இரண்டாம் வகுப்புக்கு முன்னேறியுள்ளது, மழைக்காலங்களில் இது ஒன்றாம் வகுப்பு தரத்திற்கு வந்துவிடுகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், துர்நாற்றம் பிரச்சினைகள் குறைவாகவே உள்ளன என்றார்.

“2019 ஆம் ஆண்டு முதல் இரண்டு நதிகளை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் (இன்டர்செப்டர்கள் ) ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன, மேலும் அவை பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட குப்பைகளை சேகரிப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here