தலை, கைகள் இல்லாத பெண்ணின் உடல் ஆற்றில் மிதக்க கண்டெடுப்பு

பாபர்: கம்போங் சபட் ஆற்றில், தலை மற்றும் இரண்டு கைகளும் இல்லாத பெண்ணின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில் ஆற்றின் அருகே மரக்கிளைகளில் சிக்கியிருந்த சடலம் குடிமக்களால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக. பாபர் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் கமருடின் அம்போ சக்கா கூறினார்.

“உடலை மீட்டு தீயணைப்பு வீரர்கள் நிலத்திற்கு கொண்டு வந்தனர், குறித்த பெண்ணின் சடலம் ஆடைகள் ஏதுமின்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,” என்றார்.

அவரது தலை மற்றும் இரண்டு கைகளும் காணாமல் போன நிலையில், அவரது வலது கால் முழங்காலில் இருந்து மேல் பகுதியே எஞ்சிய நிலையில், உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டது, ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், திடீர் மரணம் என வழக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சடலம் 30 முதல் 40 வயதுடைய ஒருவருடையது என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்திருக்கலாம் எனவும் நன்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.

காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் அல்லது நண்பர்கள் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், உடலை அடையாளம் காண உதவுவதற்காக, பாபர் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை அல்லது விசாரணை அதிகாரி சார்ஜென்ட் முஸ்திபின் வாஹிட்டை 014-2030071 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கமாருடின் கேட்டுக் கொண்டார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக பாபர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here