உணவகம் முன் சண்டையிட்ட 6 இளைஞர்கள் கைது

குளுவாங், ஜாலான் லாங்சாட்டில் உள்ள உணவகம் முன் சண்டையிட்ட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) நள்ளிரவில் நடந்ததாக குளுவாங் OCPD உதவி ஆணையர் பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார்.

குழுவில் இருந்த 18 வயது சிறுவன் தனது நண்பர்களை ஆத்திரமூட்டும் வகையில் பேசி சண்டையை ஆரம்பித்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. குழு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று அவர் சனிக்கிழமை (ஜூன் 17) இங்கு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மோதலுக்கு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் நாற்காலியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும், சண்டையில் ஈடுபட்ட 15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளதாகவும் ஏசிபி பஹ்ரின் கூறினார்.

கலவரத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 148ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

முன்னதாக, Aku Budak Kluang முகநூல் பக்கத்தில் 27 வினாடிகள் கொண்ட வீடியோ பதிவிடப்பட்டது. இது ஒரு வாலிபர் குழு மற்றொரு இளைஞரை அடித்து உதைப்பதைக் காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here