இன்று காலை தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் (TTDI) உள்ள பிரபல துரித உணவகமான மெக்டொனால்டின் கவுண்டர் பகுதியில் தீப்பிடித்தது.
காலை 9 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில் வெளியாகியுள்ள புகைப் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.