சிப்பாங்:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, சிப்பாங் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளம் காரணமாக, அங்குள்ள இரண்டு வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதாக சிப்பாங் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

கோத்தா வாரிசனில் இருந்து பண்டார் பாரு சலாக் திங்கி (BBST) நோக்கி வெளியேறும் சாலையும், KLIA இலிருந்து கோத்தா வாரிசனுக்குச் செல்லும் சாலையுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே சாலைப்பயனர்கள் மாற்று வழிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் குறித்த சாலைகள் இன்று தொடங்கி அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து போக்குவரத்துக்கும் மூடப்பட்டிருக்கும் என சிப்பாங் மாவட்டக் காவல் துறை தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.




















