மாநிலத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில், 45 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கிளாந்தான் மாநில சட்டமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.
கிளாந்தான் சுல்தான் சுல்தான் முஹமட் V இன் சம்மதத்தைப் பெற்ற பிறகு, இந்த தேதியில் (ஜூன் 22) மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோ அகமட் யாக்கோப் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தார்.
14வது மாநில சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 26ம் தேதி முடிவடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே, இன்று கிளந்தான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
PAS இன் ஆதிக்கத்தின் கீழ் உள்ள மாநில சட்டமன்றத்தை கலைத்த முதல் மாநிலமும் கிளாந்தான் ஆகும்.